அந்தியூர், கொடுமுடியில்கனமழை பெய்தது


அந்தியூர், கொடுமுடியில்கனமழை பெய்தது
x

அந்தியூர், கொடுமுடி பகுதியில் கனமழை பெய்தது

ஈரோடு

அந்தியூர் தவிட்டுப்பாளையம் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் அண்ணா மடுவு பள்ளிபாளையம் பகுதியில், நேற்று மாலை 6.30 மணி அளவில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்தன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது.

சிறிது நேரத்தில் அது கன மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி நிலவியது.

இதேபோல் கொடுமுடி, ஊஞ்சலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தெடங்கியது. 1மணி நேரத்துக்கு மேலாக நிற்காமல் மழை பெய்தது.


Related Tags :
Next Story