ரத்தசோகை கண்டறியும் முகாம்
ரத்தசோகை கண்டறியும் முகாம் நடந்தது.
புலியூர் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே ரத்தசோகை கண்டறியும் ஆய்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்பட உள்ளது. வாரந்தோறும் இரும்பு சத்து மாத்திரைகள் மட்டும் வழங்க கூடிய திட்டம் இருக்கிறது. நாட்டிலேயே முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலக்கூடிய மாணவிகளின் ஹீமோகுளோபின் அளவுகளை பரிசோதித்து பின் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சை மேற்கொள்ளவும், அவர்களுக்கு ரத்த சோகை நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதன் அடிப்படையில் புதுமையான திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம், என்றார்.