ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சங்கராபுரத்தில் ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சங்கராபுரம்
சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான ரத்தசோகை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா, தலைமை ஆசிரியை வனிதாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா வரவேற்றார். இதில் ரத்தசோகை அவற்றின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.சுகன்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து வளர் இளம் பெண்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிந்து பெற்றோர்களை பாராட்டி கவுரவிக்கபட்டது. இதில் திட்ட உதவியாளர் கிருஷ்ணவேணி, மேற்பார்வையாளர்கள் சித்ரா, சரஸ்வதி, ரமணி, பிரேமா, சிவகாமி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.