வளரிளம் பருவத்தினருக்கான ரத்த சோகை கண்டறிதல் முகாம்


வளரிளம் பருவத்தினருக்கான ரத்த சோகை கண்டறிதல் முகாம்
x

நாய்க்கனூர் ஊராட்சியில் வளரிளம் பருவத்தினருக்கான ரத்த சோகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

நாய்க்கனூர் ஊராட்சியில் வளரிளம் பருவத்தினருக்கான ரத்த சோகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட நாய்க்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி தேவி, தலைமையில் வளரிளம் பருவத்திற்கான ரத்த சோகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச. பசுபதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ரத்த சோகை குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பற்றியும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.

முகாமில் கண், பல் பரிசோதனை செய்ய்பட்டு சித்த மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. இதில் தாய் சேய் நல அலுவலர் காயத்ரி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பியூலா, மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் பிரசாந்த், விக்னேஷ்வரன், சுகாதார பணியாளர்கள், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.


Next Story