அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி


அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி
x

அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி அமாவாசை அன்று கொடியேற்றி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாமியை கோவிலில் இருந்து சகடை வாகனம் மூலம் ஊர்வலமாக கொண்டு சென்று மயானக் கரையில் வைத்து கும்பிட்டனர். அங்கு மருளாளி மூலம் குட்டிக்காவு நிகழ்வு நடைபெற்று, காவு கொடுத்த ஆட்டின் ரத்தத்தை மண் சோற்றில் கலந்து வேண்டுதலுக்காக வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. மருளாளி அருள்வந்து ஆடி பெண்களுக்கு மண்சோற்றினை வழங்கினார். பெண்கள் மண்சோற்றை சாப்பிட்டு சாமியை வழிபட்டனர். நேற்று மாலை சாமி புறப்பாடு நடைபெற்று, புதுமுறமேந்தி பிள்ளைபாவையை கழுத்திலும், வாயிலும் ஏந்தி கொண்டு மருளாளி அருளோடு வீடுவீடாக வரும் நிகழ்ச்சி நடந்தது.


Next Story