அங்கலகுறிச்சி மதுரை வீரன் கோவில் திருவிழா


அங்கலகுறிச்சி மதுரை வீரன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அங்கலகுறிச்சி மதுரை வீரன் கோவில் திருவிழா

கோயம்புத்தூர்

கோட்டூர்

கோட்டூர் அருகே உள்ள அங்கலகுறிச்சியில் மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதல், பகல் 12 மணிக்கு புண்ணிய அர்ச்சனை, இரவு 8 மணிக்கு கோவில் கும்பஸ்தானம் கொண்டு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஞான விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு கொண்டு வருதல், 9.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் மற்றும் மாவிளக்கு கொண்டு வருதல், மாலை 6 மணிக்கு அலங்கார பூஜை, இரவு 10 மணிக்கு கும்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு முனியப்பன் பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு அபிஷேக பூஜை மற்றும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story