அங்கன்வாடி மையம் சீரமைப்பு
அஞ்சுகம் நகரில் அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவை சின்னவேடம்பட்டி அருகே அஞ்சுகம் நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையம் மாநகராட்சி, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் சீரமைக்கப்பட்டது. அந்த மையத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இங்கு 120-க்கும் மேற்பட்ட விளையாட்டு உபகரணங்கள், தொலைக்காட்சி வாயிலாக கல்வி பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து கணபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி, தன்னார்வலர்கள் இணைந்து நமக்கு நாமே திட்டத் தின் கீழ் ரூ.30 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிவறையை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் திறந்து வைத்தார்.
இதில் உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.