அங்கன்வாடி ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக நாடகம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது


அங்கன்வாடி ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக நாடகம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது
x

வேப்பந்தட்டை அருகே தங்க சங்கிலியை பறித்து சென்றதாக நாடகமாடிய அங்கன்வாடி ஊழியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 40). இவர் கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மைய உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி வழக்கம்போல் பணி முடிந்து கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெங்கனூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை அருகே மர்ம ஆசாமிகள் 2 பேர் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக அரும்பாவூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையிலான போலீசார் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் தீவிர விசாரணை செய்தனர்.

3 பேர் கைது

அப்போது மஞ்சுளா தான் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் பாரதி நகரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கிருஷ்ணகுமார் (48), கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா ராமநத்தம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரிதி இளம்வழுதி (28) ஆகியோரிடம் தாமாகவே கழட்டி கொடுத்துவிட்டு மர்ம ஆசாமிகள் சங்கிலியை பறித்து சென்றதாக புகார் கொடுத்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, மஞ்சுளா, கிருஷ்ணகுமார், பரிதிஇளம்வழுதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story