அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா, நிர்வாகிகள் சகிலாபானு, பரமேஸ்வரி, சுதா மற்றும் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் 15 ஆண்டிற்கு மேலாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும், அங்கன்வாடி மையத்துக்கு தமிழக அரசு அண்மையில் அறிவித்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டரை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலின் முன்பு முற்றுகையிட்டு அமர்ந்து நேற்று முன்தினம் மாலை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story