அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோயம்புத்தூர்

கோவை

10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவ லகம் முன் நேற்று மாலை ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். போராட் டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story