அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் தனலெட்சுமி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில துணை தலைவர் மணிமேகலை, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும், அங்கன்வாடி குழந்தைகள், ஊழியர்கள், உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story