அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


அங்கன்வாடி ஊழியர்களை அலுவலர்கள் மூலம் மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். பிற துறைகளின் பணிகளை அங்கன்வாடி ஊழியர்களை செய்ய வற்புறுத்தக் கூடாது என வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் பேசினார். முடிவில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா சிறப்புரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட நிர்வாகிகள் சாராள், திருமலை ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story