அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் 1 மாதம் கோடை விடுமுறை விட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று 2-வது நாளாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சாந்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்தநிலையில் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழகத்தில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story