அங்கன்வாடி பணியாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்


அங்கன்வாடி பணியாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்
x

அங்கன்வாடி பணியாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினாா். ஒன்றிய செயலாளர் துரைராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கலைச்செல்வி, ராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு கருணைத்தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு சி.பி.எப். உடன் வழங்க வேண்டும். ஓய்வு பெறப்போகும் சத்துணவு (பள்ளி) அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பே ஆண்டு தணிக்கை முடிக்க சங்கத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலை படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story