கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம்
x

கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகழூர் பழனிமுத்துநகர் பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை மருத்துவர்கள் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர். இந்த சிறப்பு முகாமில் பெரியம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்டது. விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கான புரத சத்து நிறைந்த பசுனதீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் பசுக்கள், ஆடுகள், கோழிகளுக்கும், கன்றுக்குட்டிகளுக்கும் தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், தாது உப்பு கலவை, மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளும், முகாமில் பங்கு பெற்ற சிறப்பாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்ட கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருது வழங்கப்பட்டது.


Next Story