கவுமாரியம்மன் கோவிலில் ஆனித் திருவிழா


கவுமாரியம்மன் கோவிலில் ஆனித் திருவிழா
x
தினத்தந்தி 23 Jun 2023 12:30 AM IST (Updated: 23 Jun 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

தேனி

பெரியகுளம் தென்கரை கடைவீதியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆனித் திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா நடைபெற உள்ளது. 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நேற்று கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story