அண்ணா தொழிலாளர்-சிப்பந்திகள் சங்க வாயிற் கண்டன கூட்டம்


அண்ணா தொழிலாளர்-சிப்பந்திகள் சங்க வாயிற் கண்டன கூட்டம்
x

அண்ணா தொழிலாளர்-சிப்பந்திகள் சங்க வாயிற் கண்டன கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை மெயின் கேட் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.என்.பி.எல். அண்ணா தொழிலாளர்கள் மற்றும் சிப்பந்திகள் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளருமான கமலக்கண்ணன், புகழூர் நகர செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காகித ஆலை நிர்வாகம் 10-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்காததை கண்டித்தும், மீதமுள்ள 50 சதவீதம் எப்.டி.ஏ.வை வழங்காததை கண்டித்தும், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் நடத்தாதது குறித்தும், ஆலையில் உள்ள தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பேசினார். இதில் தொழிற்சங்கம் மற்றும் சிப்பந்திகள் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், 10-வது ஊதிய உயர்வு தற்போது வரை உயர்த்தப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க தேர்தலை இன்னும் ஆலை நிர்வாகம் நடத்தவில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காகித ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அவ்வாறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Next Story