அண்ணா நினைவு நாள் கடைபிடிப்பு


அண்ணா நினைவு நாள் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2023 7:30 PM GMT (Updated: 2023-02-04T01:00:23+05:30)
தர்மபுரி

அண்ணா நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா நினைவு நாள்

தர்மபுரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு நகர செயலாளர் நாட்டான் மாது தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி 4 ரோட்டை வந்து அடைந்தது.

தொடர்ந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ராஜா, ரஹீம், காசிநாதன், பொன் மகேஸ்வரன், சந்திரமோகன், குமார், சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், சம்பந்தம், அன்பழகன், கோமளவள்ளி ரவி, கனகராஜ், சுருளிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

தர்மபுரி மாவட்ட மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் தகடூர் விஜயன், பழனிசாமி, சின்அருள்சாமி, அசோக் குமார், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர நிர்வாகிகள் வடிவேல், சுரேஷ், பார்த்திபன், பலராமன், வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ், மாதேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் மாதையன், நாகராஜன், ராஜா, முன்னா, தண்டபாணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

இதேபோல் தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாநில துணைத்தலைவர் ஆர்.பாலு, மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கே.ஆர். ரமேஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், கணேசன், பூங்காவனம், மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, வேலாயுதம், போலீஸ் கிருஷ்ணன், மணிவண்ணன், ராஜா, நஞ்சன், முனியன், தண்டபாணி, பழனி, கண்ணதாசன், கணேசன், சீனிவாசன், புலிதேவன், காளி, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நகர தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்டத் தலைவர் சிவாஜி முன்னிலையில் நிர்வாகிகள் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் கதிர், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

இதேபோன்று பென்னாகரத்தில் தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்திற்கு மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் தர்மசெல்வன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் சோலை மணி, வேலுமணி, வார்டு செயலாளர்கள் கோவிந்தன், தியாகராஜன், பாலாஜி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளா் பி.எஸ்.சரவணன் தலைமையில் நகர செயலாளர் கவுதமன் முன்னிலையில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோன்று பையர்நத்தம், மெணசி, பூதநத்தம், மருக்காலம்பட்டி, பி.பள்ளிபட்டி பகுதியில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் ஜாகிதா செரீப், ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் ராமன், சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சண்முகம், ஒன்றிய பிரதிநிதிகள் பீலிப், சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அதியமான்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.எஸ். சண்முகம் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஒன்றிய அவைத்தலைவர் வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், ஆனந்தன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், மகேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி எல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியிலும் தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story