அண்ணா பல்கலை. கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


அண்ணா பல்கலை. கல்லூரிகளில்  உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி துணை இயக்குநர், துணை நூலகர் போன்ற பிற பணியாளர் பணியிடங்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 161 உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story