அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம்


அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2022 8:00 AM GMT (Updated: 16 Dec 2022 8:08 AM GMT)

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிச.9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24-ம் தேதி (சனிக்கிழமை)யும், டிச.10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், மாண்டோஸ் புயல் காரணமாக கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24, 31ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 19 (வியாழக்கிழமை), ஜனவரி 20 (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Next Story