பெருமாள் கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
நாங்குநேரி பெருமாள் கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை புறநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.சிவலிங்கமுத்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் முத்துக்குமார், பா.ஜனதா மாநில இளைஞரணி துணைச்செயலாளர் நயினார் பாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகள் பணகுடி லாரன்ஸ், பரமசிவன், குபேந்திரா மணி, பால்கனி, எம்.எம்.சாமி, சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story