காமராஜர் பிறந்தநாளையொட்டி அன்னதானம்


காமராஜர் பிறந்தநாளையொட்டி அன்னதானம்
x

காமராஜர் பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து முதலில் நாடார் உறவின்முறை சங்கத்தின் நிர்வாகிகள் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனை தொடர்ந்து கரூர் வெண்ணமலை அன்பு கரங்கள், நேத்ரா அறக்கட்டளை, சக்தி காது கேளார் பள்ளி, வள்ளலார் கோட்டம், வெள்ளியணை அன்பாலயம், அய்யப்பா சேவா சங்க ஆதரவற்றோர் இல்லம் ஆகிய இடங்களில் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சக்தி மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்திற்கு 10 பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் முருகேசன், சண்முகவேல், புலியூர் மணி, ஆறுமுகம், அருண், பிரபு, ஜெயகொடி, ராசாத்தி, ராஜேஷ், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நாடார் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story