அன்னை மிரா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா


அன்னை மிரா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
x

அன்னை மிரா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை


வேலூரை அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் டி.கே. கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் விதார்த் ஆனந்த்பாண்டி, ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், டி.வி நடிகர்கள் நவீன், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல், சிலம்பம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில், இயக்குனர்கள் எஸ்.பிரசாந்த், டி.கிஷோர்குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் முடிவில் நிர்வாக அலுவலர் எஸ்.சாண்டில்யன் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story