அண்ணாமலை இன்று நடைபயணம்
அண்ணாமலை இன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி அளவில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மந்திரிஓடையில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அவர், மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதனைதொடர்ந்து பஸ் நிலையம் நாலு முக்கு ரோடு வழியாக வந்து அரசு மருத்துவமனை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து திருச்சுழி செல்லும் அவர், அங்கு ரமண மகரிஷி இல்லத்திற்கு செல்கிறார். விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.
அருப்புக்கோட்டை காந்தி நகர் வந்து மதிய ஓய்வுக்கு பின்பு பாளையம்பட்டியில் இருந்து மாலை 4 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார். இதனை தொடர்ந்து இரவு ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாைள (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் பாண்டியன் நகர் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, ெரயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயில் உகந்த அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார், நகராட்சி அலுவலகம், இன்னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் மாலையில் சிவகாசியில் தொழில் அதிபரை சந்திக்கிறார். நாளை மறுநாள் சாத்தூரில் நடைபயணம், மேற்கொள்ளும் அவர் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார்.