அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்
செம்பனார்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
மயிலாடுதுறை
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி, நெல், நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை பி.எஸ்சி. இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் 42 பேர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூட நடைமுறைகள், அன்றாடம் நடைபெறும் பணிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பெறும் விளை பொருட்களை எவ்வாறு மறைமுக ஏலமிடுவது, தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ.நாம்) மூலம் விளைபொருட்களை எப்படி கொள்முதல் செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டனர்.
Related Tags :
Next Story