'அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை' - எஸ்.வி.சேகர் விமர்சனம்


அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை - எஸ்.வி.சேகர் விமர்சனம்
x

நடைபயணத்தால் அண்ணாமலைக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் வரலாம் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தனக்கு வேண்டிய சில நபர்களை வைத்துக் கொண்டு அண்ணாமலை நடத்தும் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை. அவருக்கு வேண்டுமானால் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வரலாம். தேர்தலில் ஒரு வாக்காவது வாங்கிக் கொடுப்பதற்காக முயற்சி செய்தால் தான் அது உண்மையான முயற்சி, மற்றவை எல்லாம் வெறும் விளம்பரங்கள் தான்" என்று தெரிவித்தார்.



Next Story