திமுக எம்.பி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அண்ணாமலை..!


திமுக எம்.பி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அண்ணாமலை..!
x

திமுக எம்.பி கனிமொழிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.


Next Story