அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும், மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரம் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. 376 மாணவர்கள், 304 மாணவிகள் என மொத்தமாக 680 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாவது பரிசாக ரூ.3,000, மூன்றாவது பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது. 4 முதல் 10-வது இடம் வரை பெற்ற ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் தலா ரூ.250 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story