அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:00 PM GMT (Updated: 18 Sep 2023 7:01 PM GMT)

அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் விஜய பாண்டியன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிசாமி ஏற்பாட்டில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை அம்பிகை பாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கடம்பூர் பேரூராட்சி செயலாளர் வாசமுத்து முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

இதில் தலைமை கழக பேச்சாளர் சரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் புதியம்புத்தூரில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி கோபி வரவேற்று பேசினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர்கள் கவிமுரசு, அல்லிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடராம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், ஜவகர், லட்சுமணப்பெருமாள், செங்கான், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வெம்பூரார், வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன்மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக பாஞ்சாலங்குறிச்சியில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.


Next Story