பாவூர்சத்திரத்தில் அண்ணா நினைவு தினம்


பாவூர்சத்திரத்தில் அண்ணா நினைவு தினம்
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:16:31+05:30)

பாவூர்சத்திரத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பாவூர்சத்திரத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பஸ்நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், ராஜேஸ்வரி, ஹேமா சரவணன், சங்கர், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், மகளிரணி ஷாலிமேரி, முத்துலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story