சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிப்பு..!

திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே போல, 13.03.2023 அன்று தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அனைத்து உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story