சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 6 ரயில் நிலையங்களை அமைக்கும் பணி கைவிடப்படுவதாக அறிவிப்பு
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 6 ரயில் நிலையங்களைஅமைக்கும் பணி கைவிடப்படுகிறது.
சென்னை,
சென்னையில் 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
இதில் 42.6 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைப்பதை கைவிட முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story