வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும் என அறிவிப்பு


வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும் என அறிவிப்பு
x

கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களுக்காக இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமை வார விடுமுறை என்ற நிலையில், கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களுக்காக நாளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையால் நேற்றுமுன் தினம் ஒரே நாளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வண்டலூருக்கு வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story