வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என அறிவிப்பு


வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என அறிவிப்பு
x

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வருகிறது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.. ஆண்டுதோறும் இந்த பூங்காவிற்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில் மகாவீர் ஜெயந்தி விடுமுறையை நாளை முன்னிட்டு பூங்கா செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Next Story