ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் நடந்த வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் நடந்த வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் 10-ம்ஆண்டு வருடாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே 108 வலம்புரி சங்குகளிலும், கலசங்களிலும் புனித நீர் நிரப்பப்பட்டு முகுந்தன் பட்டாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித சங்கு நீரினாலும், கலச நீரினாலும் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடத்தி மகா அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழு தலைவரும், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான ஜி. வி. கஜேந்திரன் ,கோவில் நிர்வாகிகள் பி. நடராஜன் ,ஆர். சுப்பிரமணி, குணசேகரன், செல்வராஜ் ,கொங்கராம்பட்டு சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.