அரசு பள்ளியில் ஆண்டு விழா


அரசு பள்ளியில் ஆண்டு விழா
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் ஆண்டு விழா

நீலகிரி

ஊட்டி

குன்னூரை அடுத்த சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு குன்னூர் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்கினார். இந்த பள்ளியிலே படித்து, தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற 90 வயதான தேவராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தலைமை ஆசிரியை சுமதி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சந்திரசேகர் பள்ளியின் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு பள்ளிக்கு முதன்முதலாக பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கினர். மேலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்.

விழாவில் மாணவர்களின் திறமைகளை அறியும் வகையில் கரகம், பரதநாட்டியம், பல்சுவை நடனம், கலாச்சார நடனம், வில்லுப்பாட்டு என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் பசுபதி, ஆசிரியர்கள் ஹேமலதா, சுசிலா சித்ரா, குணவதி மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் சுகுணா, பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story