கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம்


கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம்
x

2011-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதி இல்லாத கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 14-6-2018-ல் வெளியிடப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மீண்டும் 6 மாத கால அவகாசம் நீடிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story