கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம்


கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம்
x

கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட நகர்ப்புற அமைப்பு துணை இயக்குனர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 14-6-2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டன. மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். எனவே இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு ேகட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story