குட்காவுக்கு மீண்டும் தடை: நாளை ஆலோசனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


குட்காவுக்கு மீண்டும் தடை: நாளை ஆலோசனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று பரவலை கையாள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது.

குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து மாவட்ட சுகாதார அலுவர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் குட்கா விவகாரம் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை பற்றி தகவல்கள் கொடுத்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் தருபவர்கள்இன் ரகசியம் காக்கப்படும்.

குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





Next Story