அன்பில் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அன்பில் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி
லால்குடி:
லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாகும். இந்த கோவிலில் கடந்த மாதம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் நன்மைக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பங்குனி தேர் திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று காலை பூர்வாங்க பூஜைகளுடன் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் ெகாடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் குருக்கள்கள், பணியாளர்கள் உள்பட உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story