குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின மனித சங்கிலி


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின மனித சங்கிலி
x

மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர்எதிர்ப்பு தின மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்


மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர்எதிர்ப்பு தின மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மனித சங்கிலி

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஜெயசீலன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

மேலும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகம் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். சூலக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கோஷங்களுடன் நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டம்

மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவர் களிடையே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தொழிலாளர் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதில் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி, குழந்தை தொழிலாளர் தடுப்பு படை குழு உறுப்பினரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, பள்ளி கல்வித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.


Next Story