லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
x

மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.

விழுப்புரம்

மயிலம்

மயிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அலுவலக நேரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story