வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 23 Jun 2023 9:38 AM GMT (Updated: 23 Jun 2023 12:06 PM GMT)

வந்தவாசியில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வந்தவாசியில் வருவாய் துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி தாசில்தார் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சென்றனர். அவர்கள், ''கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவது முற்றிலும் குற்றமாகும்.

கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் சீரழிகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கியவாறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய பேரணியில் கோஷமிட்டு சென்றனர்.

விழிப்புணர்வு பேரணி வந்தவாசி பஜார் சாலை, தேரடி பகுதி, காந்தி சாலை. பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதி வழியாக சென்றது. பேரணியில் துணை தாசில்தார்கள் மலர்விழி, சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் கலைவாணி, வெங்கடேசன், புவனேஸ்வரி பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சென்றனர்.


Next Story