போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


திருமருகலில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திட்டச்சேரி போலீஸ் நிலையம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார்.பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் மெயின்ரோடு வழியாக சென்று திட்டச்சேரி பஸ் நிலையம் வந்தடைந்தது. தொடர்ந்து பள்ளி அருகில் உள்ள கடைகளில் போதை பொருட்களை விற்க கூடாது என்றும், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் போதைபொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். நிகழ்ச்சியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், சிவக்குமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தமிமுல் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story