போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

சங்கராபுரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் சங்கராபுரம் வட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, மூத்த நிர்வாகி அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மருந்து ஆய்வாளர் கதிரவன் மருந்து வணிகர்கள் அரசின் போதைபொருள் ஒழிப்பு திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மருத்துவரின் முறையான மருந்து சீட்டு இல்லாமல் அதிக வலி நிவாரணி மாத்திரை, தூக்க மாத்திரை, கருகலைப்பு மாத்திரைகளை விற்க கூடாது. கொள்முதல், விற்பனை இருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இதில் சிறிய தவறு இருந்தாலும் வணிகர்கள் முறையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாண்டியன், மருந்து வணிகர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் துணை தலைவர் விஜய்ஆனந்த், வட்ட பொருளாளர் துரை மற்றும் மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story