போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 27 Jun 2023 2:15 AM IST (Updated: 27 Jun 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர்

வால்பாறை

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரிலும், வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்தி வாசன் அறிவுரையின்பேரிலும் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பிரபாகரன் தலைமையில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு போதைப்பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ேமலும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுடன் போலீசார் இணைந்து கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஸ்டேன்மோர் சந்திப்பில் இருந்து காந்தி சிலை பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலையம், தபால் நிலையம், போலீஸ் நிலையம் வழியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இதேபோன்று பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து தொடங்கிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ-மாணவிகள் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரணி கோவை ரோடு, காந்தி சிலை வழியாக பஸ் நிலையத்தை சென்று அடைந்தது. தொடர்ந்து வெங்கடேசா காலனியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ராமகிருஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆனைமலை பகுதியில் வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Related Tags :
Next Story