போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் போதைப்பொருட்களை ஒழிப்பது மற்றும் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்துச்சென்றனர்.

உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பஸ்நிலையம், ஆர்ச் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று திருச்சி சாலையில் முடிவடைந்தது. இதில் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story