போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

கள்ளக்குறிச்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் இந்திலி டாக்டர்.ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் தாரணிஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் உதவிப்பேராசிரியரும், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலருமான ராஜா வரவேற்றார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியானது மந்தைவெளியில் தொடங்கி கச்சிராயப்பாளையம் ரோடு, காந்தி ரோடு, பஸ் நிலையம், சேலம் மெயின் ரோடு, கவரைத்தெரு வழியாக சென்றனர். இதில் தேசிய மாணவர் படை அலுவலர் பாண்டியன், வேதியியல்துறை உதவிப்பேராசிரியர் மாரியாப்பிள்ளை, உடற்கல்வி ஆசிாியர் விக்னேஷ் மற்றும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story