கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி


கோத்தகிரி


நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் போலீசார் சார்பில் நேற்று காலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் தொடங்கிய நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை குன்னூர் துணை சூப்பிரண்டு குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, அறநிலையத்துறை மாவட்ட குழு தலைவர் நெல்லை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணி ராம்சந்த் சதுக்கம், மார்கெட் திடல் வழியாக சென்று பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பேரணியில் சென்ற மாணவ, மாணவிகள் போதை பொருட்களால் வீடுகளில் அமைதி குலைந்து மகிழ்ச்சி குறையும். பொருளாதார சீர்கேடு நடக்கிறது. உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் நினைவுத் திறன் பாதிக்கப்படுவதுடன், குற்றச் செயல்கள் அதிகரிக்கிறது. ஆகையால் போதை பொருளை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


பேரணியில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1000 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story