முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:13 AM IST (Updated: 17 Jun 2023 6:21 AM IST)
t-max-icont-min-icon

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் உத்தரவின்படி உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு முதியோர்களை பேணிக்காக்க வேண்டிய அவசியத்தையும், முதியோர்களின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story